ரத்த அழுத்த மருந்துகளால் கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்: உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளால் அவதிபடும் நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், 'கொரோனா' பாதிப்பு, எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.



உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மொத்தம், 3.84 லட்சத்திற்கும் அதிகமானோர், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். சர்வதேச நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த கொரோனா, இளம் வயதினரை காட்டிலும், முதியவர்களையே அதிகமாக பாதிக்கிறது. இந்நிலையில், இதுகுறித்த அறிவியல் விளக்கத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை, 'ஜர்னல் ஆப் ட்ராவல் மெடிசன்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான, அமெரிக்காவின் லுாசியானா பல்கலைக்கழக பேராசிரியர் கேம்ஸ் டியாஸ் கூறியதாவது: மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நீண்டகால சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ஏ.சி.இ.ஐ., எனப்படும், ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் -இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஏ.ஆர்.பி., எனப்படும், ஆஞ்சியோடென்சின் ரிசெப்டர் பிளாக்கர்ஸ் ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.